மழை வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி மாவட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வெள்ளத்தில் மாட்டிக்கொண்டுள்ள மக்கள் அனைவரையும் படகு மூலம் மீனவர்களும், தீயணைப்புத்துறையினரும் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

Update: 2021-11-15 04:56 GMT

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வெள்ளத்தில் மாட்டிக்கொண்டுள்ள மக்கள் அனைவரையும் படகு மூலம் மீனவர்களும், தீயணைப்புத்துறையினரும் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் மழையால் அணைகள் உட்பட பலர் நீர்நிலைகள் நிரம்பிவிட்டது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் ஏரி, குளம், அணை என்று நிரம்பியுள்ளதால் கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் தீவு போன்ற காட்சி அளிக்கிறது.

மேலும், பருத்திக்கடவு, நெடும்புறம், வைகலூர் உள்ளிட்ட பகுதிகளை தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 500க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வீடு உள்ளே, தெருக்களில் தண்ணீர் இருப்பதால் பொதுமக்களால் வெளியில் வரமுடியாமல் அவதியுற்று வந்தனர். இதனால் தீயணைப்புத்துறை மற்றும் மீனவர்கள் உதவியுடன் படகுகள் மூலமாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பலர் தங்களின் கால்நடைகளை நினைத்து வேதனை அடைகின்றனர். கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துவர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: Puthiyathalamurai

Image Courtesy:The News Minute

Tags:    

Similar News