தென்பெண்ணை நதியில் அணை.. கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை தேவை: அன்புமணி ராமதாஸ்.!
கர்நாடக மாநில அரசு தென்பெண்ணை நதியில் அணை கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடக மாநில அரசு தென்பெண்ணை நதியில் அணை கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மிகப்பெரிய அளவில் புதிய அணை கட்டி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தென்பெண்ணை ஆற்றுச் சிக்கல் தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தில் விசாரணையில் இருக்கும் போது கர்நாடகம் தன்னிச்சையாக அணை கட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.
காவிரி ஆற்று நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு எவ்வாறு அனைத்து விதிகளையும், ஒப்பந்தங்களையும், அறத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு சுயநலத்துடன் நடந்து கொண்டதோ, அதே போல் தான் தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே புதிய அணை கட்டுவதிலும் நடந்து கொண்டது. கர்நாடக மாநிலம் பங்கரபேட்டை ஒன்றியம் யார்கோள் கிராமத்தில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரம், 430 மீட்டர் நீளத்திற்கு புதிய அணை கட்டும் பணியை அம்மாநில அரசு கடந்த 2012ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. அப்போதே பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் அமைப்புகளும் அதைக் கண்டித்து கடுமையான போராட்டங்களை நடத்தியதன் பயனாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதனால் உழவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மற்றொருபுறம், மார்க்கண்டேய நதியில் அணை கட்ட தடைவிதிக்க வேண்டும்; பெண்ணையாற்றின் குறுக்கே தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த பாசனத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை 2019&ஆம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தென்பெண்ணையாற்று சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசை அணுகும்படி அறிவுறுத்தியது. அதன்படி தமிழக அரசும் மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. அதையேற்று தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைத்திருந்தால், மார்க்கண்டேய ஆற்றில் அணை கட்டப்படுவதை தடுத்திருக்கலாம்.