'Kathir exclusive' தருமபுரி: 'ஜனா' என்ற நிதி நிறுவனம் பெண்ணிடம் பணம் வசூலிக்க குண்டர்களை இறக்கி அடாவடி!

Update: 2022-06-26 07:19 GMT

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட இண்டூர் அருகே அதகப்பாடி உள்ளது. அங்கு ஜனா என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் கந்துவட்டி வசூலிக்கும் கும்பல் போன்று செயல்பட்டு வருகிறது. அவர்கள் ஏழையான அப்பாவிகளை கண்டறிந்து அவர்களுக்கு லோன் என்ற பெயரில் பணத்தை கொடுத்துவிட்டு 5 முதல் 10 பேர் வரையில் குண்டர்களை அழைத்து வந்து கடன் வசூல் செய்தும், பெண்களை மிகவும் தரக்குறைவாகவும் பேசி வரும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.

ஜனா சுமால் பைனான்ஸ் பேங்க் என்ற பெயரில் தருமபுரி மாவட்டத்தில் அதியமான்கோட்டை, சோமனஅள்ளி, அதகப்பாடி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. அவர்கள் முதலில் ஏழ்மையான நிலையில் உள்ள பெண்களை கண்டறிந்து அவர்களிடம் உங்களுக்கு எங்கள் வங்கி லோன் கொடுக்கிறது எனவே நீங்கள் வாங்கிக்கொள்கிறீர்களா என்று நைசாக பேசி முதலில் ஒரு குரூப்பை தயார் செய்யுங்கள். அந்த குருப்பில் 5 அல்லது 10 பெண்கள் இணைந்தால் லோன் கொடுக்கிறோம் என்று கூறிவருகின்றனர். இதனால் கூலி வேலைக்கு செல்பவர்கள் அதனை நம்பி அங்கு கடன் எடுக்க முற்பட்டு விடுகின்றனர்.

இந்நியைலில், ஒரு பெண்ணுக்கு சுமார் 50000 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால் அதில் டாக்குமென்ட் மற்றும் இன்சூரன்ஸ் முதல் தவணை என்று பிடித்துக்கொண்டு அவர்களுக்கு வெறும் 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே அவர்களின் வங்கி கணக்கில் போடுகின்றனர். இதற்காக அவர்கள் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையில் நேரடியாக கடன் பணத்தை வசூல் செய்கின்றனர். இது கந்துவட்டியை விட மூன்று முதல் 5 மடங்கு பெண்களிடம் வட்டி வாங்குகின்றனர். ஒரு தவணை செலுத்த தவறினால் எடுத்தவர்களின் வீட்டுக்கு 5 முதல் 10 பேர் வரையிலான அடியாட்கள் (குண்டர்கள்) சென்று பெண்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தி வருகின்றனர். இதனால் சிலர் மனம் நொந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே கந்து வட்டி கொடுமையால் பல அப்பாவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் காவல்துறை சார்பில் கந்து வட்டி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அதனை தற்போது ஒரு நிதி நிறுவனம் காற்றில் பறக்கவிட்டுள்ளது.

அதாவது தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ளது கூரம்பட்டி என்ற கிராமம். அந்த கிராமத்தில் ஒரு பெண் ஜனா நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த மாதத் தவணை செலுத்த தவறிவிட்டார். இதனால் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற சின்னதுரை, சிவா, கார்த்திக் என்ற 3 குண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர். உடனடியாக தவணையை கொடுக்கிறாயா என்று மிரட்டினர். இது பற்றி அந்த கிராம மக்கள் அந்த குண்டர்களிடம் ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்ற கேள்வியை எழுப்பினர். நாங்கள் பணம் கொடுத்துள்ளோம் இப்படித்தான் மிரட்டி பணம் வசூல் செய்வோம் என்று பேசினர்.

மேலும், நீங்கள் எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற திமீர் பேச்சுடன் பேசினர். மேலும், அப்பெண் 100 நாள் வேலைத்திட்டத்திற்காக நேற்று (ஜூன் 25) காலை செல்ல முற்பட்டபோது அவரை தடுத்து நிறுத்தினர். பணத்தை கொடுத்துவிட்டு வேலைக்கு செல்லுங்கள் என்று மிரட்டியுள்ளனர். இது போன்று வங்கி என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்திக்கொண்டு கந்து வட்டி கும்பலை போன்று மிக மோசமான நிலையில் பெண்களிடம் நடக்கும் கும்பல்கள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். இது போன்று தருமபுரி மாவட்டத்தில் வெவ்வெறு பெயர்களுடன் நிதி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News