Kathir Exclusive, தருமபுரி: புரோக்கர் கையில் நல்லம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலகம்!

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. அதில் மேல் புறத்தில் வட்ட வழங்கல் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

Update: 2021-12-29 07:26 GMT

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. அதில் மேல் புறத்தில் வட்ட வழங்கல் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த தாலுகாவிற்கு மொத்தம் 32 பஞ்சாயத்துகள் உள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து குடும்ப அட்டை சேவைகளும் இங்கேதான் பெற முடியும். இதனால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை பெறுவதற்காக நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு வருவது வழக்கம்.

அது போன்று புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு பொதுமக்கள் இ சேவை மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புகின்றனர். அது போன்று விண்ணப்பிக்கும் பொதுமக்களை வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை. அதாவது புரோக்கர்கள் இ சேவை மையங்களில் பொதுமக்களின் செல்போன் எண்களை வாங்கிக்கொண்டு அவர்களிடம் பேசுகின்றனர். உங்களுக்கு ஒரு வாரத்திற்குள் குடும்ப அட்டைகள் பெற்றுத்தருகிறோம். அதற்கு ரூ.3000 முதல் 5000 வரை பணம் நிர்ணயம் செய்கின்றனர். அதில் பாதி அலுவலர்களுக்கு அளித்து விட்டு மீதியை புரோக்கர்கள் வைத்துக்கொள்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 


எனவே நேரடியாக சென்று பொதுமக்கள் அலுவலர்களிடம் கேட்டால் அவர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் துளைத்து எடுக்கின்றனர். முறையான பதிலை கூறாமல் அலைக்கழிப்படுகின்றனர். இதனால் வேறு வழியின்றி குடும்பத்தை நடத்துவதற்கு உணவு தேவை. அதற்காக புரோக்கர்கள் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு குடும்ப அட்டைகளை பெற வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று விசாரணை நடத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்பாவி மக்களுக்கு சேவை செய்யவே அதிகாரிகள், அதற்காகத்தான் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் அளிக்கப்படுகிறது. அதனை புரிந்து கொள்ளமால் சாதாரண மக்களிடம் லஞ்சத்தை பெற்றுக்கொள்வது மட்டுமே அதிகாரிகளின் நோக்கமாக உள்ளது. இனிமேல் ஆவது திருந்தி மக்களுக்கான சேவைகளை செய்ய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.

Tags:    

Similar News