கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை! வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு செயல்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தாய்மொழியான தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. எனவே தமிழ் மொழியை கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் கட்டாய பாடமாக்க வேண்வும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவுக்கு மத்திய அரசு சார்பில் இருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் விருப்பப் பாடமாக இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறும்போது, கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் மொழி பாடம் இருக்கிறது. எனவே அங்கு தமிழ்வி கல்வி தேவை என்று உரிமை கோர முடியாது. மேலும், தமிழ் வழியில் படிக்க விரும்புகிறவர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பியது மட்டுமின்றி தீர்ப்பையும் ஒத்திவைத்தனர். மேலும் வழக்கையும் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar