இணைய உடன்பிறப்புகளையே முகம் சுளிக்க வைத்த கே.என்.நேருவின் கொத்தடிமைத்தனம்!

இணைய உடன்பிறப்புகளையே முகம் சுளிக்க வைத்த கே.என்.நேருவின் கொத்தடிமைத்தனம்!

Update: 2020-11-09 09:40 GMT

நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க மூத்த தலைவர் கே.என்.நேரு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார். அதுவரை ஒன்றும் இல்லை. ஆனால், அதற்கு பிறகு மு.க.ஸ்டாலினின் மகனும், தி.மு.க இளைஞரணி செயலாலருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றது மட்டுமின்றி அதை பெருமையாக தனது சமூக ஊடக கணக்குகளிலும் பகிர்ந்து மகிழ்ச்சியுற்றார்.

இந்த சந்திப்பு குறித்து அவர் கூறியுள்ள வார்த்தைகள் முக்கியமானவை. "69 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக இளைஞரணி செயலாளர் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது." என்ற வார்த்தைகள், 69-வயது மூத்த தலைவர் தன்னைவிட 27 வயது சிறியவரிடம் வாழ்த்து பெறுவதா என்ற சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த செயல் குறித்து தி.மு.க-வின் தீவிர விஸ்வாசிகளே இணையத்தில் தங்கள் அதிருப்திகளை தெரிவித்து, உதயநிதி ஸ்டாலினை சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அசிங்கமா இல்லையா அண்ணா? என உதயநிதியை பார்த்து ஒரு உடன்பிறப்பு குமுறியுள்ளார்.

"இதெல்லாம் தேவையில்லாத ஆணி, தேர்தல் முடியும் வரை கொஞ்சம் மூடிக்கொண்டு இருந்தால் நல்லது" என்று உதய் அண்ணாவுக்கு அட்வைஸ் செய்கிறார் இன்னொரு உ.பி.

இது போன்று பல உ.பி-க்கள் உதய் அண்ணாவிற்கு அட்வைஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

செவி சாய்ப்பாரா உதய் அண்ணா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Similar News