கோவை அரசு மருத்துவமனையில் தீ விபத்து - பரபரப்பு!

கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-22 07:21 GMT

கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனைக்கு வாகனம் வந்து சேர்ந்ததும் மருத்துவ பணியாளர்கள் நோயாளியை அழைத்து சென்றனர்.


இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. ஏற்கனவே நோயாளி மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து தீயணைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயை அணைத்தனர். ஆம்புலன்சில் இருந்த தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் எரிந்ததால் மற்ற நோயாளிகளிடம் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Similar News