கோவை: 95 வயதில் கொரோனாவை வென்று சாதனை படைத்த முதியவர்.!
கோவை, தொண்டாமுத்தூரில் 95 வயதில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து சாதனை படைத்த முதியவர் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளார்.
கோவை, தொண்டாமுத்தூரில் 95 வயதில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து சாதனை படைத்த முதியவர் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளார்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் பழனிசாமி, இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வந்தார். அவர் 95 வயதிலும் கொரோனா தொற்றை வென்று காட்டியுள்ளார். மன தைரியத்துடன் இருந்தால் அனைத்து விதமான நோயையும் முற்றிலும் அகற்ற முடியும் என்பதற்கு முதியவர் முன்மாதிரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.