கோவையில் ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு.!
சிறுத்தை உயிரிழந்த சம்பவம் வனஉரியின ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட போட்டுக்கடவு வனப்பகுதியில் இன்று காலை வழக்கம் போல வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது பசுங்கனி மேடு என்ற இடத்தின் அருகே சென்றபோது, ஒரு ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்திருந்தது.
இதனை கண்ட வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வனத்துறை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தவுடன்தான் உயிரிழந்ததிற்கான காரணங்கள் தெரியவரும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். சிறுத்தை உயிரிழந்த சம்பவம் வனஉரியின ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.