கோயம்பேடு: சிறு வணிக கடைகளுக்கு திங்கள் வரை அனுமதி.!
சிறு வணிகர்கள் அனைவரும் இன்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் வணிகர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற காரணத்தினால், நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே சென்னை கோயம்பேட்டில் உள்ள சிறு வணிக கடைகளுக்கு தடை விதிப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தால் சிறு வணிகர்கள் அனைவரும் இன்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் வணிகர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையின்போது வருகின்ற திங்கள் வரை (ஏப்ரல் 12) சிறு வணிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு சிறு வணிகர்கள் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.