கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் திறப்பு.. திருத்தணி, கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் திறப்பு.. திருத்தணி, கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

Update: 2020-12-05 20:22 GMT

நிவர், புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.


அதே போன்று கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பியுள்ளது. ஏரிகளின் பாதுகாப்பை கருதி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், கனமழை காரணமாக ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கம் நிரம்பி வருகிறது. பாதுகாப்பை கருதி உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பள்ளிப்பட்டில் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News