நாமக்கல்: காலில் அடிபட்டு உயிருக்கு போராடியவரிடம் சாதிப்பெயர் கேட்ட எஸ்.ஐ.!

திருவண்ணாமலையை சேர்ந்த சிலர் கட்டிட தொழிலுக்காக கோவைக்கு வாகனங்களில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது மோதியது.

Update: 2021-06-24 04:48 GMT

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே காலில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரிடம் சாதிப்பெயர் கேட்ட எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலையை சேர்ந்த சிலர் கட்டிட தொழிலுக்காக கோவைக்கு வாகனங்களில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது மோதியது.

இதில் தொழிலாளர்கள் பலர் காயமடைந்தனர். அப்போது ஒரு தொழிலாளரின் கால் உடைந்து உயிருக்காக போராடியுள்ளார். இது பற்றி பதகவல் அறிந்த குமாரபாளையம் எஸ்.ஐ. அத்தியப்பன், உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல், நீங்கள் என்ன ஜாதி என கேட்டுள்ளார்.

ஏற்கனவே வலியால் துடித்துக்கொண்டிருந்தவரிடம் சாதிப்பெயரை கேட்பது நியாயமா. இது பற்றிய வீடியோவை அங்கிருந்தவர்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த உயர் அதிகாரிகள் உடனடியாக ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Similar News