வருமானவரித்துறை சோதனை.. லலிதா ஜூவல்லரியில் சிக்கிய ரூ.1000 கோடி.!
பல்வேறு மாநிலங்களில் கிளைகளுடன் இயங்கி வரும் லலிதா ஜூவல்லரியில் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் கணக்கில் வராத ரூ.1000 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோதனையானது கடந்த 4ம் தேதியில் முதல் தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜூவல்லரி கடைகளில் நடத்தப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் சோதனையானது நடைபெற்றது.
அப்போது நிர்வாகம் வைத்திருக்கும் தங்கத்தின் இருப்பு மற்றும் அவர்கள் விற்பனை செய்த ரசீதுகள் உள்ளிட்டவைகளை வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். அப்பபோது சுமார் 1,000 கோடி ரூபாய் அளவில் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டது.
அது மட்டுமின்றி 1.2 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத பணத்தை ரொக்கமாக தாங்கள் பறிமுதல் செய்திருப்பதாகவும், வருமான வரித்துறை கூறியுள்ளது. இதனையடுத்து லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு வருமானவரித்துறையினர் சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவார்கள் என கூறப்பட்டுள்ளது.