ஆதார்- மின் இணைப்பு பதிவில் நடைபெற்ற கோல்மால்: இரண்டரை லட்சம் பதிவுகள் நிராகரிப்பு!

மின் இணைப்புடன் ஆதரிக்கும் நடவடிக்கையில் நடைபெற்ற கோல்மால் 2.50 லட்சம் பதிவுகள் நிராகரிப்பு.

Update: 2022-12-19 01:56 GMT

தமிழகத்தில் தற்பொழுது தமிழக அரசு மானியங்கள் மற்றும் திட்டங்களை பெறுவதற்கு மக்கள் அனைவரும் ஆதார் மற்றும் மின் இணைப்பை கட்டாயம்  இணைக்க வேண்டும் என்று செய்தியும் சமீபத்தில் வெளியாகியது. அதனை தொடர்ந்து பல்வேறு மக்களும் தங்களுடைய மின் இணைப்பு, ஆதார் உடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது மின் எண்ணுடன், ஆதார் இணைக்கும் பொழுது வேறு நபரின் ஆதார் எண்ணை பதிவிடுவது தெரியவந்துள்ளது.


அவ்வாறு பதிவு செய்து 2.50 லட்சம் ஆதார் பதிவுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு மின்வாரியம் இலவச மானியம், இது குடிசை வீடு, விவசாயம் விசைத்தறி ஆகிய பிரிவுகளில் உள்ள 2.68 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் அவர்களின் ஈடுபட்டுள்ளது.இந்த பணி நவம்பரில் துவங்கியது. இதன் காரணமாக மின்வாரிய தளத்தில் எங்கிருந்த படியும் ஆதார் எண்ணை இணைக்கலாம். குறிப்பாக 24 பிரிவு அலுவலங்களில் மாதம் 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்களுக்கு சென்று இணைத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மின் இணைப்பு எனில் யார் பெயரில் உள்ளதோ? அவரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். பிரிவை தேர்வு செய்து அவரை அவர்களின் தற்போதைய ஆதார் எண்ணை இணைக்கலாம். மேலும் உரிமையாளராக இருந்து மின் இணைப்பு பெயரில் மாற்றம் செய்யவில்லை எனில் ஓனர் சர்வீஸ் கனெக்சன் என்ற பிரிவை தேர்ந்தெடுக்கலாம்.

அனைத்திற்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சில வீட்டு உரிமையாளர்கள் ஓனர் பிரிவை தேர்வு செய்து, வேறு நபரின் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள். அந்த எண்ணில் உள்ள நபரின் பெயரும், மின் இணைப்பில் உள்ள பெயரும் வெவ்வேறாக உள்ளது. இவ்வாறு மின் இணைப்பு எண்ணுடன் தவறாக இணைத்து 2.50 லட்சம் பேரின் ஆதார் பதிவை மின்வாரியம் நிராகரித்து இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News