ஆதார் இணைப்பில் சொதப்பிய மின்வாரியம் - மீண்டும் பதிவு செய்ய அழைப்பு! யாரெல்லாம் செய்யவேண்டும்?

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் இணைத்த பலரது தகவல்கள் பதிவாகவில்லை மீண்டும் நேரடியாக இணைக்க வலியுறுத்தல்.

Update: 2023-01-19 02:23 GMT

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைன் மூலமாக செய்தவர்கள் பலருடைய தகவல்கள் பதிவாகவில்லை. இதனால் அவர்கள் மீண்டும் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஆதரவுடன் இணைக்க அதிகாரிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் 2.67 கோடி மின் இணைப்புகள் உள்ளன. நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டது.


இதற்கு பணிகள் நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை ஒன்று புள்ளி ஒன்பது ஆறு கோடி பேர் ஆதார் எண்ணை இணைந்து உள்ளதாகவும் இன்னும் சுமார் 70 லட்சம் பேர் ஆதார் இணைக்க வேண்டியது இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குள் மின் இணைப்பு ஆதார் உடன் இணைக்க கடைசி அவகாசமாகும். இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் டிசம்பர் நான்காம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்து நபர்கள் தகவல்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார வாரியத் தொகுப்பில் சேமிக்கப்படாமல் போய்விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


இதனால் எத்தனை பேரில் ஆதார் எண் இணைப்பு முழுமையாக சேர்க்கப்படவில்லை என்பது தெரியவில்லை. எனவே அவர்களுக்கு தற்பொழுது SMS அனுப்பப்பட்டு வருகிறது. அதன் மூலம் மின் இணைப்புடன் மீண்டும் ஆதார் இணைக்க நேரடியாக மையத்திற்கு சென்று தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News