உணவின்றி தவித்த வாயில்லா ஜீவன்கள்.. தேடி.. தேடி சென்று உணவளித்த காவல் துணை ஆணையர்.!

உணவின்றி தவித்த வாயில்லா ஜீவன்கள்.. தேடி.. தேடி சென்று உணவளித்த காவல் துணை ஆணையர்.!

Update: 2020-11-26 13:53 GMT

சென்னை மெரினா கடற்கரையில் உணவின்றி தவித்த 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு, வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி, உணவளித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையில் கரையை கடந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.


இந்நிலையில், நிவர் புயலால் ஊரே முடங்கி இருந்த நிலையில் உணவின்றி தவித்த நாய்களுக்குக்கு தேடித் தேடி உணவளித்துள்ளார் சுப்புலட்சுமி. சென்னை மெரினா கடற்கரையில் பொழுது போக்குகள்  மட்டும் அல்லாமல் பல்வேறு ஜீவராசிகள் உயிர் வாழக்கூடிய பகுதியாகவும் இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பறவைகள் விலங்கினங்கள் அங்கு வருகின்ற பொதுமக்கள் அளிக்கின்ற உணவுகளை உண்டு உயிர் வாழ்ந்து வருகின்றது

இந்நிலையில், நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் மழைநீர் குளம்போன்று தேங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல முடியா நிலை ஏற்பட்டது. அங்கு பசியால் சுமார் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் தவித்து வந்தன. அப்பகுதி வழியாக ரோந்து சென்ற வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி அங்கு பசியால் இருந்த நாய்களுக்கு தேடித்தேடி உணவு அளித்துள்ளார். அதனை அங்கிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவரது சேவைகளுக்கு பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர். வாயில்லா ஜீவனுக்கு உணவளிப்பது மிகப்பெரிய பாக்கியம் என கூறியுள்ளனர்.
 

Similar News