திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் தொலைதூர ரயில் சேவை.. மத்திய அமைச்சரிடம் மனு அளித்த கருப்பு முருகானந்தம்!
திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் தொலைதூர ரயில் சேவை.. மத்திய அமைச்சரிடம் மனு அளித்த கருப்பு முருகானந்தம்!
திருவாரூர், காரைக்குடி வழித்தடத்தில் நீண்ட தொலைவு ரயில்களை இயக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை டெல்லியில் சனிக்கிழமை(21.11.2020) சந்தித்து தமிழக பாஜக துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் மனு அளித்தார்.
அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான 148 கி.மீ., வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் இந்த வழித்தடத்தில் உள்ள 72 ரயில்வே கேட்களுக்கும் கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாததால், தொலை தூர ரயில் சேவை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
மேலும், சென்னையில் இருந்து காரைக்குடி, ராமேஸ்வரம் மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் ஆகியவற்றை இந்த வழித்தடத்தில் இயக்க தென்னகர ரயில்வே அனுமதி வழங்கிய நிலையிலும், இன்னமும் கேட் கீப்பர்கள் பணியமர்த்தப்படாததால், தொலை தூர சேவைகளை முழுவதுமாக தொடங்க முடியவில்லை, எனவே இந்த வழித்தடத்தில் கேட் கீப்பர்களை உடனடியாக நியமித்து தொலை தூர ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.