மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபோகம்

Update: 2022-04-16 02:14 GMT

கோயில் மாநகரம் என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெறு வழக்கம். அதில் மிகவும் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழாவும் ஒன்று. அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையும், அருகில் உள்ள அழகர் கோயிலையும் இணைக்கும் விழாவாக இது நடைபெறுகிறது.

அதே போன்று இந்த ஆண்டுக்கான சிறப்புமிக்க திருவிழா கடந்த 5ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மிகவும் விமர்சையாக கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு விழாவாக வரிசையாக நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமாக மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நேற்று (ஏப்ரல் 15) தேரோட்டமும் நடைபெற்றது.

இதற்கிடையில் அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் அணிந்து தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. ஒவ்வொரு பக்தர்களும் தங்களின் கைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடிச்சு, பாட்டுப்பாடி முழங்க வரவேற்றனர். அதே போன்று இன்று கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இதனால் மதுரை மாநகரமே மக்கள் தலைகளாக காட்சி அளிக்கிறது.

Source: Daily Thanthi

Image Courtesy: Dinamani

Tags:    

Similar News