பாலக்கோடு அருகே எண்ணெய் லாரி கவிழ்ந்து விபத்து: குடங்களில் எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்.!
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள குளிக்காடு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சமையல் எண்ணெய் லாரி விபத்திற்குள்ளானது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள குளிக்காடு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சமையல் எண்ணெய் லாரி விபத்திற்குள்ளானது.
ஓசூரில் இருந்து சேலம் நோக்கி சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள குளிக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் இருந்த நெல் வயலில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்து எண்ணெய் ஆறாக ஓடியது. இதனை கவனித்த அப்பகுதி மக்கள் குடங்களை எடுத்து சென்று வயல் வெளியில் மிதந்து கொண்டிருந்த எண்ணெய்களை எடுத்து சென்றனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.