ராமநாதபுரம்: 'லவ் ஜிகாத்தால்' இளம்பெண் தற்கொலை ! 4 பக்கம் கடிதம் எழுதி வைத்துள்ளதால் பரபரப்பு!

ராமநாதபுரத்தில் காதலித்த ஆண் தன்னை ஏமாற்றப்பட்டதால் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் லவ் ஜிகாத்தால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-11 04:07 GMT

ராமநாதபுரத்தில் காதலித்த ஆண் தன்னை ஏமாற்றப்பட்டதால் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் லவ் "ஜிகாத்தால் தற்கொலை செய்து கொள்வதாக" குறிப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த 25 வயது மதிக்கதக்க பெண் இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார் . அப்போது அன்வர் மகன் ஷேக்முகமது 30, அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி "காதலிக்கிறேன்" என்று கூறியுள்ளார். இவர் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காதலுக்கு ஷேக் முகமது அம்மாவும் ஆதரவு அளித்துள்ளார். இதனால் தனது அம்மா திருமணத்திற்கு ஆதரவு அளித்திருப்பதாக கூறி பெண்ணிடம் உறவு வைத்துள்ளார். இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு ஷேக் முகமது குடும்பம் திருச்சிக்கு சென்றுள்ளது. அதன் பின்னர் திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்து பெண்ணின் செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதனால் பல முறை பெண் தொடர்பு கொண்டும் ஷேக் முகமது போன் அழைப்பை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெண் நேற்று முன்தினம் (டிசம்பர் 8ம் தேதி) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் தற்கொலை செய்வதற்கு முன்னர் ஒரு 4 பக்க அளவில் பரபரப்பான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தியுள்ளார் ஹேக் முகமது. இவர் இது போன்ற பல்வேறு பெண்களை ஏமாற்றியதாக கூறியுள்ளார். இது ஒரு லவ் ஜிகாத் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது தற்கொலைக்கு காரணமான ஷேக் முகமது, அவரது தந்தை அன்வர் மற்றும் தாய், மாமா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை தொடர்ந்து கேணிக்கரை போலீசார் 4 பேர் மீது பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து ராமநாதபுரம் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்பாவி இன்ஜினியரிங் பட்டதாரி பெண் தற்கொலைக்கு தூண்டிய ஷேக் முகமதுவை உடனடியாக கைது செய்ய வேண்டும். அது மட்டுமின்றி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது லவ் ஜிகாத் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விசாரணையில் போலீசார் மெத்தனம் காட்டினால் தேசிய புலனாய்வு முகாம் விசாரிக்கப்பட வேண்டும். எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நீதி மற்றும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Source:Dinamalar




Image Courtesy: TheLeaflet

Tags:    

Similar News