ஊட்டியில் கோயில் பூசாரியாகப் பணியாற்றி வரும் 8 வயது சிறுவன் - வாழ்க்கையை மாற்றப்போகும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

Madras HC directs Tamil Nadu government to ensure education of an 8-year-old temple priest in Nilgiris

Update: 2021-12-24 11:21 GMT

நீலகிரி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு முதல் கோயில் பூசாரியாகப் பணியாற்றி வரும் 8 வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பெதலா கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை, நடுஹட்டி கிராமத்தில் உள்ள ஹெத்தாய் கோயிலில் 5 வயதாக இருக்கும்போதே, அர்ச்சகராக நியமித்ததாக கட்டபெட்டு கிராமத்தைச் சேர்ந்த டி.சிவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது குழந்தைத் தொழிலாளர்களாக வழி வகுக்கும் எனவும், சிறுவன் கல்வி மற்றும் அவரது குழந்தைப் பருவ இன்பத்தை இழந்துள்ளார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

படகா சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஜி ரணேஷ், வயதான பூசாரிகளுடன் கோயிலுக்குள் வசித்து, பல்வேறு கடமைகளைக் கற்றுக்கொள்வதுடன், கல்வியையும் பெற வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் இது குறித்த அறிக்கையை சமர்பித்தார். இந்த தொற்றுநோய் நேரத்தில், அனைத்து வீடுகளுக்கும் கல்வி என்ற திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்துகிறது. 'இல்லம் தேடி கல்வி' திட்டன்  சிறுவன் சேவை செய்யும் கோவிலுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதிக் கல்வி அதிகாரி கே பாலமுருகன் தாக்கல் செய்த நிலை அறிக்கையில், சிறுவன் தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். ஒரு கிராம கல்வியாளர் மற்றும் ஒரு தகுதிவாய்ந்த ஆண் ஆசிரியர் சிறுவனுக்கு படிப்பு உபகரணங்களை வழங்குவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags:    

Similar News