அரசியல்வாதி எது வேண்டுமானாலும் பேசலாம், ஆன்மிகவாதி பேசக்கூடாதா - மதுரை ஆதீனம் அதிரடி!

Update: 2022-05-07 08:42 GMT

தருமபுரம் ஆதீனம் பல்லக்கு சுமக்கும் விஷயங்களில் அமைச்சர் சுமூகமான முடிவு எட்டப்படும் என்று கூறியிருப்பது நல்லது மட்டுமின்றி பாராட்டத்தக்கது. ஆனால் இதனை முன்னரே செய்திருக்க வேண்டும் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், பாலபள்ளம் முத்துமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அவரிடம் ஆசி பெற்றனர். இதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: மஹா சிவராத்திரிக்கு நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கபட்டபோது, தமிழகத்தில் மட்டும் விடுமுறை விடப்படாது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்.

அதே சமயம் விடுமுறை குறித்து தி.மு.க. அரசிடம் கேட்டாலும் பயன் இல்லை என்றார். மதுரை ஆதீனம் சங்கபரிவார் இயக்கங்களுக்கு சாமரம் வீசுவதாக நாஞ்சில் சம்பத் சொல்லியதாக கூறுகின்றீர்கள். தற்போது அவர் யாருக்கு சாமரம் வீசுகிறார் சொல்லுங்கள் என்றார்.

மேலும், அவர் தற்போது எந்த கட்சியில் இருக்கின்றார் என்றே தெரியவில்லை. அடுத்து எங்கே போனார், இப்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. நான் இறைவன் ஒருவருக்கு மட்டுமே சாமரம் வீசுவேன். அதே நேரத்தில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்கிச் செல்லும் நிகழ்ச்சிக்கு தடை விதித்தனர். போப் ஆண்டவர் மற்றும் இஸ்லாமியர்கள் பல்லக்கு தூக்குவது குறித்து அவர் கேள்வி எழுப்புவாரா. ஆன்மிகமும், அரசியலும் ஒன்றுதான். கோயிலில் அரசாங்கம் மட்டும்தான் உள்ளது. அரசியல்வாதிகளே அறநிலையத்துறை அமைச்சராகிறார்கள்.

ஏன் சர்ச், பள்ளிவாசலில் அரசு தலையிடுவது இல்லை. நமது கோயிலில் தலையிடுவதால், அரசியலும், ஆன்மிகமும் ஒன்றுதான். பிரதமரை விரைவில் சந்திப்பேன். தற்போது தி.மு.க.வினர் ஓவராக சென்றால் பிரதமரை சந்திப்பேன். எனக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனர். மேலும், அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆன்மீகவாதி பேசக்கூடாதா என்ன. தற்போது பட்டினப்ப பிரவேசத்திற்கு எதிர்ப்பு இருக்கும் காரணத்தினால்தான் ஆதரவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல்லக்கு சுமக்க நான் மட்டுமல்ல தமிழக மக்களே தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News