மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக 2 எம்.பி.க்கள் நியமனம்.!
இதில் முதலாவது பணியாக சாலை அமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. மருத்துவமனை அமைய உள்ள வளாகம் சுற்றியும் கிட்டத்தட்ட 5.5 கிலோ மீட்டருக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் முதலாவது பணியாக சாலை அமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. மருத்துவமனை அமைய உள்ள வளாகம் சுற்றியும் கிட்டத்தட்ட 5.5 கிலோ மீட்டருக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகிய இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.