45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முடிக்கப்படும்.. மத்திய அரசு தகவல்.!

45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முடிக்கப்படும்.. மத்திய அரசு தகவல்.!

Update: 2020-12-18 18:28 GMT

டெல்லியில் உள்ளதை போன்று எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. மதுரை எயம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படாததற்கு எல்லோரும் பா.ஜ.க-வை கை காட்ட, பா.ஜ.கவோ தமிழக அரசை நோக்கி கையை நீட்டியது.

தமிழக அரசு நிலம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தது. அதுமட்டுமின்றி ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் எட்டப்படவில்லை எனவும் கூறப்பட்டது.

இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 200 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், மத்திய அரசு கூடுதலாக கேட்ட 22 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு தற்போது வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவித்தது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக ஜப்பான் நிறுவனத்திடம் கடன்பெறுவது, ஒப்பந்தம் தொடர்பான பணி நடைபெற்றுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஒப்பந்தப் பணிகள் நிறைவடையும். அதன்பின்னர் 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News