மதுரையின் அடையாளமாக கருதப்படும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் ஒன்றாக கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று (ஏப்ரல் 5) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினமே மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என்று இரண்டு வேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வீதி உலா வருகிறது. அதில் மிகவும் முக்கிய நிகழ்ச்சியாக 12ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 13ம் தேதி விஜயமும் நடைபெற உள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi