மதுரையில் கொரோனா பாதித்த தெருக்களை அடைக்க உத்தரவு: மாநகராட்சி ஆணையர்.!
கொரோனா தொற்று ஏற்படும் பகுதிகளில் முன்பு கடைப்பிடிக்கப்பட்டதை போன்று மீண்டும் கடைப்பிடிக்கப்படும். தொற்று பாதித்த பகுதிகளை அடைக்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மதுரை மாநகராட்சி பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது, இதனையொட்டி தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வார்டுகள் பரிசோதனை முகாம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்படும் பகுதிகளில் முன்பு கடைப்பிடிக்கப்பட்டதை போன்று மீண்டும் கடைப்பிடிக்கப்படும். தொற்று பாதித்த பகுதிகளை அடைக்கப்படும். பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்படும். உள்ளிட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது.