வீடுகளில் மாடு, நாய் வளர்த்தால் வரி செலுத்த வேண்டும் ! அதிர்ச்சியடைந்த தமிழக மக்கள் !

அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி வெளியிட்ட இந்த அறிவிப்பு பொதுமக்களையும், விவசாயிகளையும் மிகப்பெரிய அதிர்ச்சியடைய செய்துள்ளது என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Update: 2021-08-10 11:01 GMT

வீடுகளில் நாய், மாடு வளர்த்தால் ரூ.10 வரி செலுத்த வேண்டும் என்று மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தெருவில் வீட்டு நாய், மற்றவர்களை அச்சுறுத்தும் பட்சத்தில் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி கூறியுள்ளது. மேலும், இறைச்சி கடை, பிரியாணி விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுரடிக்கு ரூ.10 மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு ரூ.10 வரி வசூல் செய்யப்படும்.

அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி வெளியிட்ட இந்த அறிவிப்பு பொதுமக்களையும், விவசாயிகளையும் மிகப்பெரிய அதிர்ச்சியடைய செய்துள்ளது என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் மாடு, ஆடு, கோழி, உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து அதன் மூலம் தங்களின் குடும்பங்களை நடத்தி வருவார்கள். ஆனால் மதுரை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Source: Dinakaran

Image Courtesy:Facebook

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=696886

Tags:    

Similar News