தமிழகத்தில் 445 கிராமங்களில் இன்றளவும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதும், அந்த கிராமங்கள் அதிகம் உள்ள மாவட்டமாக மதுரை முதலிடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் சென்னை மாவட்டம் இருப்பது ஆர்.டி.ஐ. மூலமாக தெரியவந்துள்ளது.
மதுரையை சேர்ந்தவர் கார்த்திக், இவர் சமூக ஆர்வலமாக உள்ளார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவிடம் கேட்டிருந்த கேள்விக்கு பெறப்பட்ட பதில்கள் மூலம், தமிழகத்தில் மட்டும் 445 கிராமங்களில் இன்றும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது வரையில் 341 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களின் எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்கள் எவை என்று பார்ப்போம். மதுரை 43, விழுப்புரம் 25, திருநெல்வேலி 24, வேலூர் 19, திருவண்ணாமலை 18, திருச்சி 16, சேலம் 16, திண்டுக்கல் 16, தஞ்சாவூர் 16, கோயம்புத்தூர் - 15, கடலூர் -15, தென்காசி -14, தூத்துக்குடி -14, சிவகங்கை -14, ஈரோடு -13, திருப்பூர் -12, தேனி - 12, விருதுநகர் -12, பெரம்பலூர் -11, ராமநாதபுரம் -௧௦ இந்த பட்டியலில் ஒரே ஒரு கிராமத்துடன் சென்னை கடைசி இடத்தில் உள்ளது.
இவ்வளவு கிராமங்கள் இன்னமும் தீண்டாமையை கடைபிடித்து வரும் நிலையில், அதை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 2021-ம் ஆண்டில் தான் அதிகபட்சமாக 597 விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் பதிலில் தெரியவந்துள்ளது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu