மதுரையில் நாய்கள் விஷம் வைத்து கொலை: அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவங்கள்.!
மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் நேற்று மூன்று குட்டிகள் மற்றும் அதன் தாய் என நான்கு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் தெரு நாய்க்குட்டிகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த மர்ப நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள மாநிலம், ஆதிமலத்துராவில் நாய் ஒன்றை கொடூரமாக அடித்து கொன்ற சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியாகியது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் நேற்று மூன்று குட்டிகள் மற்றும் அதன் தாய் என நான்கு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு நாய்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுமார் 21 நாய்கள் விஷம் வைத்தும், அடித்தும் கொடூரமாக செய்யப்பட்டுள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.