மதுரையில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை.!
உசிலம்பட்டியில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டியில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் வேலைக்கு செல்பவர்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நகை பட்டறை உரிமையாளர் சரவணன் (35), மனைவி ஸ்ரீநிதி, மகள் மகாலட்சுமி (10), அபிராமி (5), மகன் அமுதன் (5) ஆகியோர் தற்கொலை செய்துள்ளனர்.
சரவணனின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அருகாமையில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது அனைவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரை மாவட்டத்தை உலுக்கியுள்ளது.