மதுரை அரசு மருத்துவமனையில் பாணியாற்றிய 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-07 05:57 GMT

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தினசரி பாதிப்பு முதல் அலையை விட அதிகமாகவே பதிவாகி வருகிறது.




 


இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் தினசரி பாதிப்பாக ஆயிரத்தை நெருங்கி உள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி நோயால் பாதிக்கப்படுபவர்கள் மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு மையத்திலும், பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.




 


இந்நிலையில், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் உட்பட 44 பேருக்கு இன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் பணியாற்றும் 44 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் மருத்துவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News