கொரோனா தடுப்பு மருந்துக்கு தடைகோரிய வழக்கு தள்ளுபடி! மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா தடுப்பு மருந்துக்கு தடைகோரிய வழக்கு தள்ளுபடி! மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Update: 2021-01-29 17:56 GMT

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இது குறித்த பொதுநல வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 3ம் கட்ட பரிசோதனை நடந்து கொண்டிருக்கும் போதே அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக குறிப்பிட்ட மனுதாரர், தடுப்பூசிகளின் பாதுகாப்பு, செயல் திறன் குறித்த தரமதிப்பாய்வு செய்யப்படாமலும், நெறிமுறைகளை பின்பற்றாமலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறியிருந்தார்.

விசாரணையில் நிபுணர் குழு அமைத்து அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில் எதன் அடிப்படையில் தடை கேட்கிறீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுதாரர் விரும்பாவிட்டால் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாமல் இருந்து கொள்ளலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இது போன்ற நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்த பின்னரே தடுப்பூசிகளுக்கான அனுமதி வழங்கப்படுகிறது. இதனை கவனிக்காமல் தான் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்திலும் இது போன்ற வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News