பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் தமிழகத்தில் மணல் கொள்ளை - ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து!
பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்கிறது என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சானப்பிராட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் என்பவர். இவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் அமர்விற்கு நேற்று வந்தது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு- கேரளா எல்லைப் பகுதிகளில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர், கரூர் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்கின்றது. இந்த ஆட்டு படுக்கையில் பத்து முதல் 15 அடி ஆழம் வரை தோண்டி மணல் திருடப்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் ஆற்று மணலை திருடி வருகின்றனர். எனவே எங்களின் மனுவின் அடிப்படையில் அமராவதி ஆற்று படுக்கையில் மணல் கொள்ளையை தடுக்கவும், அதற்காக ஆற்றுப்பகுதியில் அமைத்த பாதையை அகற்றி விட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் மனுதாரர். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணன் பிரசாந்த் ஆகியோர் முன் அமர்வுக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் மணல் கொள்ளை தடுப்பதற்கு நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் இன்னும் மணல் கொள்ளை தொடர்ந்து நடப்பது எப்படி? என்று கேள்வியும், அவர்கள் முன்வைத்து உள்ளார்கள். பின்னர் தமிழகத்தில் மணல் கொள்ளையை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்கள். விசாரணை முடிவில் இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்கள்.
Input & Image courtesy: Thanthi News