மதுரை புதிய ஆதீனம் : இன்று அனைத்து பொறுப்புகளும் வழங்கப்பட்டது.

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை ஆதீனம் மடம் உள்ளது. இந்த மடத்தின் பீடாதிபதியாக கடந்த 46 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அருணகிரிநாதர் கடந்த 13ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

Update: 2021-08-23 13:17 GMT

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை ஆதீனம் மடம் உள்ளது. இந்த மடத்தின் பீடாதிபதியாக கடந்த 46 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அருணகிரிநாதர் கடந்த 13ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதனையடுத்து மடத்திற்கு இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வசம் அனைத்து பொறுப்புகளும் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், அருணகிரிநாதர் உயிரிழந்து இன்று 10 நாட்களுக்கு பின்னர் புதிய ஆதீனமாக ஹரிஹர தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்புக்கு முன்னர் மறைந்த அருணகிரிநாதருக்கு குரு பூஜை நடத்தப்பட்டது. மிகவும் எளிமையாக நடைபெற்ற புதிய ஆதீனம் பதவி ஏற்பு விழாவில் தருமபுர ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், கோவை ஆதீனம் மற்றும் ஆன்மீகவாதிகள் மட்டும் கலந்து கொண்டனர்.

Source, Image Courtesy: Maalaimalar

https://www.maalaimalar.com/news/topnews/2021/08/23124508/2942316/Tamil-News-Madurai-New-Adheenam-has-sworned-today.vpf

Tags:    

Similar News