மதுரையில் இருந்து ராணுவ விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள்.!

மதுரை விமான நிலையத்திலிருந்து 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ராஞ்சிக்கு ராணுவ விமானம் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.

Update: 2021-05-29 08:52 GMT

மதுரை விமான நிலையத்திலிருந்து 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ராஞ்சிக்கு ராணுவ விமானம் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.


 



இதனை சரிசெய்வதற்கு மத்திய அரசு ராணுவ விமானங்கள் மற்றும் சரக்கு ரயில்கள் மூலமாக ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கொண்டுவரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் நோயாளிகளின் உயிர்கள் காக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 24 ஆயிரம் கிலோ கொள்ளளவு கொண்ட 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு ராணுவ விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஆக்சிஜனை நிரப்பிய பின்னர் மீண்டும் சரக்கு ரயில் மூலமாக டேங்கர் லாரிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News