மதுரை: பொதுமக்கள் வெளியில் வருவதற்கு காவல்துறை தடை.!
தமிழகத்தில் பரவி கொரோனா தொற்று காரணமாக மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவி கொரோனா தொற்று காரணமாக மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கிற்கு பின்னர் அதிகமான தொற்று கண்டறியப்பட்டது. அதற்கு காரணம் பொதுமக்கள் யாரும் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்காமல், வெளியில் சுதந்திரமாக சுற்றி வந்ததே என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரவர் வீடுகளின் அருகாமையில் இருக்கும் காய்கறி மற்றும் மளிகை கடைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியிடங்களுக்கு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.