மதுரை ரயில் நிலையத்திற்கு குறுந்தகவல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.!
மதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் நகரமான மதுரை ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மோப்ப நாய்களுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலுகத்திற்கு குறுந்தகவல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து உடனடியாக மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாயுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.