மதுரையில் சடலங்களை எரிக்க டோக்கன் விநியோகம்.. அதிர்ச்சியில் உறவினர்கள்.!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மின் மயானங்களில் சடலங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை உண்டாகியுள்ளது.

Update: 2021-05-12 10:18 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மின் மயானங்களில் சடலங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை உண்டாகியுள்ளது. அந்த வகையில் மதுரையில் உள்ள மின் மயானங்களில் சடலங்களை எரிக்க டோக்கன் விநியோகம் செய்யப்படுவது மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்நிலையில், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


 



அந்த வகையில், மதுரை தத்தனேரியில் உள்ள 2 மின் மயானங்களில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை எரியூட்டப்பட்டு வருகிறது. ஒரு உடலை எரியூட்டுவதற்கு 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் ஆவதாக கூறப்படுகிறது. மின் மாயனத்தில் 2 யூனிட்கள் உள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மட்டுமே செயல்படுவதால் அதிகமான உடல்களை எரிக்க முடியாமல் பல மணி நேரங்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக உடல்களை எரியூட்டுவதற்கு டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Similar News