இன்று மகா சிவராத்திரி: சிவன் கோயில்களில் குவியும் பக்தர்கள் கூட்டம்.!

இந்துக்களின் மிக முக்கியமான விழாவாக நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அனைவரும் இன்று இரவு முழுவதும் கோயில்களில் சென்று வழிப்பாடு நடத்துவார்கள்.

Update: 2021-03-11 03:33 GMT

இந்துக்களின் மிக முக்கியமான விழாவாக நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அனைவரும் இன்று இரவு முழுவதும் கோயில்களில் சென்று வழிப்பாடு நடத்துவார்கள்.

மகா சிவராத்திரி உருவானதாகக் கூறப்படும் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஏராளமான பக்தர்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களுக்கு பக்தர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இன்று சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Similar News