பாளையங்கோட்டை: மகாசிவராத்திரி திருவிழாவிற்கு அனுமதி மறுத்த அதிகாரிகள்! போராட்டம் நடத்திய பக்தர்கள் !

Update: 2022-02-13 14:24 GMT
பாளையங்கோட்டை: மகாசிவராத்திரி திருவிழாவிற்கு அனுமதி மறுத்த அதிகாரிகள்! போராட்டம் நடத்திய பக்தர்கள் !

பாளையங்கோட்டை திரிபுராஞ்தேஸ்வரர் சிவன்  கோயிலில் மகா   சிவராத்திரி திருவிழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 


ஆண்டுதோறும் வரக்கூடிய மகாசிவராத்திரி என்பது ஆன்மீகவாதிகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். அந்நாளில் சிவாலயங்களில் பூஜைகள் மற்றும்  கொண்டாட்டங்கள் என திருவிழா போன்று அன்றைய இரவில் சிவாலயங்கள் திகழும்.


இந்நிலையில், பாளையங்கோட்டை திரிபுராஞ்தேஸ்வரர்  கோவிலில், ஆண்டுதோறும் மகா  சிவராத்திரி அன்று அக்கோயிலில் பூஜைகளும் விழாக்களும்  கொண்டாடப்படுவதால்  பக்தர்கள் திரளாக பங்கேற்பார்கள்.


ஆனால் இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று, வெறும் பூஜைகள் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும் மற்ற விழா நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்துள்ளனர் அரசு அதிகாரிகள். இதனால் அக்கோயில் பக்தர்கள் ஆத்திரமடைந்து கோயில் முன்பு போராட்டத்தில் இறங்கினர், அறநிலையத் துறை அலுவலகத்தையும்  முற்றுகையிட்டனர். 

Dinamalar




Tags:    

Similar News