மகாத்மா காந்தி நினைவு தினம்.. கடலூர் அரசு மருத்துவமனையில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி.!

மகாத்மா காந்தி நினைவு தினம்.. கடலூர் அரசு மருத்துவமனையில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி.!

Update: 2021-01-30 10:41 GMT

கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது. தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினமான இன்று அவர் கண்ட கனவை நனவாக்கிடும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட துணை இயக்குநர் டாக்டர் சித்திரைசெல்வி தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இது தொடர்பாக மாவட்ட துணை இயக்குநர் டாக்டர் சித்திரைசெல்வி பேசியதாவது: தொழுநோய் என்பது உள்ளவர்களை ஆரம்ப நிலையில் நோயின் தன்மையை கண்டறிந்து அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற செய்வதன் மூலமும், கூட்டு மருந்து சிகிச்சை மூலமும் எளிதில் குணப்படுத்தலாம்.

மேலும் தொழுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக தமிழக அரசு மாதம் ரூ.1500 வழங்குவதாகவும் தெரிவித்தார். தொழுநோய் உள்ளவர்களை தனிமைப்படுத்தி ஒதுக்கி வைக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள், மாவட்ட நலக்கல்வியாளர் சுரேஷ் பாபு, சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News