வேல் யாத்திரையில் முக்கிய மாற்றம் - என்ன சொல்கிறார் பாஜக தலைவர் எல்.முருகன்.?

வேல் யாத்திரையில் முக்கிய மாற்றம் - என்ன சொல்கிறார் பாஜக தலைவர் எல்.முருகன்.?

Update: 2020-11-26 08:59 GMT

திருச்சியில் நேற்று பா.ஜ.க தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறுகையில், நிவர் புயல் காரணமாக ஏற்கனவே தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வெற்றி வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இனி வேல் யாத்திரை செல்ல ஏற்கனவே திட்டமிட்டிருந்த மாவட்டங்களிலும் வேல் யாத்திரை, புயல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. 

இதையடுத்து, வருகிற டிசம்பர் 4ம் தேதி சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய இடங்களில் வேல் யாத்திரை வழிபாடு செய்து, டிசம்பர் 5ம் தேதி திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவடையும். புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் ஆங்காங்கு பா.ஜ.க வினர் ஈடுபடுவார்கள். பாஜகவுடனான கூட்டணியை அதிமுக உறுதி செய்துள்ள நிலையில், கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கட்சியின் அகில இந்தியத் தலைமை விரைவில் அறிவிக்கும். 

அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளை பாஜக கேட்டதாக வரும் தகவல் யூகம்தான் எத்தனை இடங்கள் என்பது குறித்து இப்போது ஜாதகம் பார்க்கத் தேவை இல்லை. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஒரு நல்ல முடிவை எடுப்பார்.சரியான நேரத்தில் சரியான முடிவை ஆளுநர் அறிவிப்பார் என கூறினார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும். 

ஏனெனில், மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். தமிழ்நாடு அரசும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் குடும்ப அரசியல்தான் உள்ளது. எனவே, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா சரியாகத்தான் பேசினார்.
 

Similar News