தமிழகத்தில் 808 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு - ரூ.365 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

Update: 2022-11-08 06:23 GMT

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு

தமிழகத்தில் 808க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டது. ரூ.365 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு, அவற்றை ஏலம் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்புடைய சங்கங்கள் அனைத்திலும் உள்ள நிர்வாகக் குழு கலைக்கப்பட்டும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளும் முடவடைந்துள்ளது. 

முறைகேடுகளுக்கு தீர்வு 

தமிழகம் முழுவதிலும் உள்ள 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களையும், 25 பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களையும் கணினிமயப்படுத்துவதற்கு நபார்டு வங்கி மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கணினிமயமாக்கல் பணிகளால் கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்றுமதி வணிகம்

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஏற்றுமதி உரிமத்தை பெற்றுள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டில் சவுதிஅரேபியா, அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு ரூ.40இலட்சம் செலவில் ஏற்றுமதி வணிகம் நடைபெற்றுள்ளது. இதுபடிப்படியாக விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Input From: Hindu Tamil


Similar News