செஞ்சிலுவை சங்கத்தில் முறைகேடு - அதிரடியாக சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதால் செஞ்சிலுவை சங்கத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

Update: 2022-11-22 02:38 GMT

இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதால் செஞ்சிலுவை சங்கத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான மூன்று கோடியே 37 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர். 2011 ஆம் ஆண்டிலிருந்து அந்த சங்கத்தில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் அதில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும் அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரினால் புரோகித் சார்பில் சி.பி.ஐயிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து செஞ்சிலுவை சங்க தமிழக நிர்வாகிகள் ஆறு பேர் மீது சி.பி.ஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கினை அமலாக அதிகாரிகள் பதிவு செய்தனர். இந்நிலையில் சங்கத்தின் தமிழக தலைவர் ஹரிஷ் மேத்தா உள்ளிட்டோரின் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Source - Polimer News

Similar News