மீண்டும் திறக்கப்பட்ட மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்.!
மீண்டும் திறக்கப்பட்ட மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்.!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 11 மாதங்களாக மூடப்பட்ட மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பாறை மீது பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இந்த கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது கட்டப்பட்டது. வங்க கடலில் பயணம் செய்யும் கப்பல் மற்றும் படகுகள் இப்பகுதியை கடந்து செல்லும்போது மாலுமிகளுக்கு அடையாளம் காட்டுவதற்கு வசதியாக இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது.
இந்த கலங்கரை விளக்கத்தை பார்வையிடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கலங்கரை விளக்கம் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக மாமல்லபுரம் கடந்த 11 மாதங்களாக மூடப்பட்டிருந்த கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தை பார்வையிடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.