மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்: உண்மையில் அந்த குறி ஈஷா மையத்திற்கு வைத்ததா?

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி முகமது ஹாரிக் ஈஷா மையத்திற்கு சென்றது ஏன்? விசாரணையில் திருப்பம்.

Update: 2022-11-23 07:26 GMT

கடந்த சில நாட்களாக மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாட்டை செய்ய காரணமாக இருக்கிறது. குறிப்பாக கர்நாடகாவின் மங்களூரில் உள்ள நாகூர் பகுதியில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து சிதறியதால் ஆட்டோ டிரைவர் உட்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. நாச வேளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குண்டை எடுத்துச் சென்ற பொழுது இந்த சம்பவம் நடந்தது. தற்பொழுது அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


இந்த நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த ஒரு சம்பவம் போலீசார் விசாரணையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆட்டோவில் சென்ற பயங்கரவாதி முகமது ஷாரிக் என்ற நபர் பின்னியில் இருப்பதாக கூறப்பட்டது. தற்பொழுது அவரை விசாரிக்கையில் முக்கிய குற்றவாளியான இவர் கோயம்புத்தூரில் தங்கி இருந்து ஈஷா மையத்திற்கு சென்று வந்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர் தன்னுடைய whatsapp DPயில் ஈஷா மையத்தில் உள்ள சிலையை வைத்து இருப்பதும் போலீசார் விசாரணையில் கண்டது கண்டறியப்பட்டுள்ளது.


இதனால் முகம்மது ஹாரிக் ஈஷா மையத்தில் உள்ள சிலைக்கு குறி வைத்தார் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. மேலும் முகமது சாதிக் கோவை சிங்காநல்லூர் சில மாதங்களுக்கு முன்பு தனியார் விடுதியில் ஒன்றில் தங்கி இருந்தபோது கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த தீவிரவாதியை சந்தித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் நேரடியாக சந்திக்கவில்லை என்று போலிஸ் சிறப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இருந்தாலும் சந்தேகம் தற்பொழுது தீவிரமாக விசாரணையை ஏற்படுத்தியிருக்கிறது.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News