இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு ! - மன்னார்குடியை மையம் கொள்ளும் தேசிய புலனாய்வு அமைப்பினர் !

mannargudi bava bahurudeen nia investigation

Update: 2021-09-17 04:35 GMT

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கை கொண்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். அவரது வீட்டில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய பிறகு விசாரணைக்காக  சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

பாவா பக்ருதீன் என்ற 43வயதான நபர், மன்னார்குடியில் உள்ள ஆசாத் தெருவில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். தஞ்சாவூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரை, சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு வந்த தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர் கைது செய்துள்ளனர்.

பாவா பக்ருதீனின் வீட்டுக்குச் சென்று, அவரது வீட்டை சோதனையிட்டனர். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், அங்கு கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களுடன், அவரையும் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில், மதுரை காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு தொடரப்பட்ட 721 என்ற குற்ற எண் கொண்ட, முகமது இக்பால் என்பவர் தொடர்புடைய ஒரு வழக்கில் பாவா பக்ருதீனுக்கும் தொடர்பு இருக்கிறது. இவர் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கை கொண்ட சில அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது என்றனர்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் பக்ரூதின் தொடர்பில் உள்ளதாக கூறி பக்ரூதினிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. 


Tags:    

Similar News