ஸ்டாலின் அறிவிப்பு.. விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் சட்டப்பேரவை முற்றுகை !
Breaking News.
சட்டப்பேரவை நடைபெறும் சென்னை கலைவாணர் அரங்கம் வெளியே விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்தல் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டாலினை கண்டித்து சட்டப்பேரவை நடைபெறும் கலைவாணர் அரங்கம் அருகே சிலைகளுடன் சாலை மறியலில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக சிலைகள் விற்பனை செய்வதற்கும், விழாவை பாதுகாப்புடன் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து சட்டப்பேரவை நடைபெறும் அருகே 100க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
Source, Image Courtsy: TopNews
https://www.toptamilnews.com/manufacturers-of-ganesh-idols-staged-road-roko-in-front-of-kalaivanar-arangam-urging-tamilnadu-government-to-permit-placing-lord-ganesh-idols-on-roadsides-during-vinayagarchaturthi-celebrations/