பழமையான மஞ்சினீஸ்வரர் கோவிலுக்கு ஏற்பட்ட நிலைமை: பக்தர்கள் கதறல்!
மிகவும் பழமையான மஞ்சினீஸ்வரர் அய்யனாரப்பன் கோவில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் மரக்காணம் அருகில் அமைந்துள்ளது கீழ் புத்துப்பட்டி, இங்கு மஞ்சினீஸ்வரர் அய்யனாரப்பன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் தான் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தும் கண்டுகொள்ளப்படாமல் மிகவும் பழமையான கோவில் பாலடைந்து கிடக்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இந்த கோவிலில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் எதுவும் செய்யத் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பக்தர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.
இக்கோயிலுக்கு சொந்தமாக மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் உப்பளங்கள், வணிக வளாகங்கள் உள்ளது. இந்த கோவில் மூலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு மாதம் தோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் வந்து தற்போது இந்த கோவில் பாலடைந்து நிலைமை தான் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருப்பதாகவும் அங்கு உள்ள சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பல்வேறு பக்தர்கள் வருகை தரும் பிரசித்தி பெற்ற ஆலயமாக இந்த ஒரு கோவில் திகழ்ந்து இருக்கிறதும் குறிப்பிடத் தக்கது.
மேலும் இங்கு இருக்கின்ற சிறப்பு அம்சம் ஆலய தளம் தரையில் ஒட்டியவாறு அமைந்திருக்கும். இங்கு நான்கு சக்கரம் கொண்டு வரும் பொழுது இந்த நுழைவாயில் திறக்கப்பட மாட்டாது. ஆனால் சில விஐபிகள் மட்டும் வருகை தரும் பொழுது இவை திறக்கப்பட்டு இருக்கிறது. வயதானவர்களை அழைத்து வரும்பொழுது பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
Input & Image courtesy: News 18