24 மணி நேரமும் ட்விட்டரா.. வெட்கமா இல்லையா.. தி.மு.க. எம்.பி.யை கிழித்து தொங்கவிட்ட மாரிதாஸ்.!

தருமபுரி எம்.பி.யாக தேர்ந்தெடுத்து கடந்த 2 வருடங்களாக மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை.

Update: 2021-04-29 10:04 GMT

தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் எந்த நேரமும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எதையாவது ஒன்றை போஸ்ட் செய்து கொண்டிருப்பார்.

தருமபுரி எம்.பி.யாக தேர்ந்தெடுத்து கடந்த 2 வருடங்களாக மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. தொகுதி வளர்ச்சியை பற்றி கவலைப்படாமல் எந்த நேரமும் சமூக வலைதளத்திலேயே காலத்தை கடத்தி வருகிறார். இதனால் அவரை சமூக வலைதளங்களில் தினமும் கிண்டல், கேலி செய்யும் காட்சிகள் அரங்கேறுவதை பார்த்திருப்போம்.




 


கடந்த சில நாட்களாக திமுகவுக்கு எதிராக யாராக கருத்து பதிவிட்டால், உடனடியாக சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு அந்த ட்வீட்டை டேக் செய்து விடுவார். ஆனால் இவர் மட்டும் நாட்டின் பிரதமர் முதல் மாநில முதலமைச்சர் வரை அவதூறான வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிடுவார்.

இது பற்றி யாராவது கேட்டால் திமுகவுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா என்று பதில் அளிப்பார். ஆனால் செந்தில்குமாருக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் சாதாரண மக்களுக்கும் உண்டு என்பதை மறந்து பேசுகிறார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவார்கள். இதனிடையே மாரிதாஸ் மற்றும் கிஷோர் சாமிக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் நோக்கில் திமுக எம்.பி. செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.




 


இந்நிலையில், சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிராக தனது கருத்தை எப்போதும் பதிவிட்டு வருபவர் மாரிதாஸ் ஆவார். அவர் இன்று ஒரு ட்விட் செய்துள்ளார். அதில், குறிப்பிட்டுள்ளதாவது: 3 மனைவி 5துணைவி அதில் நாளு அடுத்தவன் மனைவி அத்தோடு சில. அவைகளுக்கும் பிள்ளைகளுக்கும் 10 தலைமுறைக்கு சொத்து சேர்க்க ஆட்சி, அதிகாரம், சாராயம், லாட்டரி. ஏதாவது கேட்டால் திராவிடம் பெரியார் தமிழன் என உருட்டுவது. இதுதானே திமுக தலைவர் பலர் வரலாறு!

தருமபுரி எம்.பி. வழக்கு மிரட்டலுக்காக இந்த பதிவு என குறிப்பிட்டிருந்தார். அடுத்த பதிவில், தருமபுரி எம்.பி. அவர்கள் எனக்கு மிரட்டல் விடுவதாக நினைத்துக்கொண்டு என் பெயரில் இயங்கும் எல்லா போலி ஐடிக்கும் பதில் கொடுப்பது சுத்த முட்டாள்தனம்.




 


எம்.பி.யாக தொகுதி மக்கள் படும் கஷ்டம் உணருங்கம், எதாவது உருப்படியாக செய்ய முயற்சி செய்யுங்கள்.

24 மணி நேரமும் ட்விட்டர்?

வெக்கமே இல்லையா? என்று பதிவிட்டுள்ளார்.

மாரிதாஸ் சொல்வது போன்று தருமபுரியில் திமுகவிற்கு ஓட்டு போட்ட ஜெயிக்க வைத்த மக்களுக்கு இதுவரை ஒரு திட்டமும் நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News